இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கிரிஷ் கங்காதரன் கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 14 அன்று உலகம் முழுதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாகிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, பூஜா ஹெக்டே சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு லோகேஷ், “கூலி படத்தின் டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார். இது தவிர தன்னுடைய அடுத்த படம் கைதி 2 தான் என்றும் கூறியுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ், சூர்யா கூட்டணியில் ரோலக்ஸ் திரைப்படம் உருவாகும் என்பதையும் உறுதி செய்துள்ளார். லோகேஷ் கனகராஜ் கொடுத்த இந்த தகவல்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.