இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வருபவர் கமல்ஹாசன். சிறுவயதில் இருந்து நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், கிட்டதட்ட 70 வயதை கடந்தும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். அதாவது இவருடைய நடிப்பு வெறும் நடிப்பாக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட வேடங்களில் பல்வேறு பரிமாணங்களில் பிரகாசித்து உலக நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் இவர் இளம் நடிகர்கள், இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்குபவர். இவரைப் பார்த்து சினிமாவிற்குள் வந்தவர்கள் பல பேர் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தான் கமல்ஹாசனை பார்த்து வளர்ந்ததாக கூறியுள்ளார். அதன்படி அவர், “நான் கமல் சாரின் வெறும் ரசிகன் மட்டும் இல்லை. அவருடைய பக்தன். நான் இப்போது இருக்கின்ற நிலைக்கு அவர்தான் காரணம். அவரைப் பார்த்துதான் வளர்ந்தேன். அவர் வாழ்க்கையில் சாதித்ததில் குறைந்தது ஒரு சதவீதத்தையாவது நானும் சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
#KamalHaasan sir is my Idol..❣️ I am not just a fan, I am a Devotee for him..🙏 The Stage where I’m right now is because of him.. I grew up watching him.. I also want to do at least 1% of What he has achieved in his life..🤝💯
– #LokeshKanagaraj pic.twitter.com/2K3s5xeJwx
— Laxmi Kanth (@iammoviebuff007) September 2, 2025
லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கமல் நடிப்பில் விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். அடுத்தது விக்ரம் 2 திரைப்படத்தையும் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.