இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தான் ரஜினிக்கு முன்னதாக சொன்ன கதை குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘மாநகரம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘கைதி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ரஜினி நடிப்பில் கூலி எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினாலும் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜை நெட்டிசன்கள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். படத்தில் பல இடங்களில் லாஜிக் இல்லை என மீம்ஸ்களை போட்டு தாக்கி வருகின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ், “ரஜினி சாருக்கு நான் சொன்ன கதையே வேற. அந்த கதையை பண்ணவே இல்லை. இரண்டு மாதங்கள் அந்த ஸ்க்ரிப்டில் வேலை செய்தேன். ரஜினி சாருக்கும் எனக்கும் அந்த கதை மிகவும் பிடித்திருந்தது.
#LokeshKanagaraj
– Initially, I narrated a story to #Rajini sir and worked on the script for 2 months. Rajini sir also liked it.
– After 2 months, I called Rajini sir and said, “Sir, let’s do another script.#Cooliepic.twitter.com/6bJLwW4uSf— Movie Tamil (@MovieTamil4) August 17, 2025

ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து நான் ரஜினி சாருக்கு கால் பண்ணி வேறொரு ஸ்கிரிப்ட் பண்ணலாம் என்று சொன்னேன். அதுதான் கூலி. அந்த ஸ்கிரிப்டில் எனக்கு ஏதோ ஒன்று குறைவது போன்று இருந்தது. அதை டெவலப் செய்ய வேண்டும் என்றால் எனக்கு இன்னும் அதிக நாட்கள் தேவைப்படும். ஆனால் ரஜினி சாரின் நேரத்தை வீணடிக்க கூடாது என்று தான் ‘கூலி’ படத்தை எடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.