லோகேஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து இவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் இவர், ரஜினி நடிப்பில் கூலி எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படம் 2025 ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இது தவிர கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் உருவெடுத்த இவர், அடுத்தடுத்த புதிய படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் புதிய படம் ஒன்றை தானே தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடிக்க உள்ளார் லோகேஷ். அதாவது இந்த புதிய படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், தி ரூட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் பூஜை இன்று (மே 12) நடைபெறுவதாகவும், வருகின்ற மே 18இல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.