spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'லவ்வர் படம் மிகவும் எதார்த்தமானது'...... இயக்குனர் செல்வராகவன் பாராட்டு!

‘லவ்வர் படம் மிகவும் எதார்த்தமானது’…… இயக்குனர் செல்வராகவன் பாராட்டு!

-

- Advertisement -

'லவ்வர் படம் மிகவும் எதார்த்தமானது'...... இயக்குனர் செல்வராகவன் பாராட்டு!ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் லவ்வர். பிரபு ராம் வியாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருந்தார். மேலும் சரவணன், கண்ணா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். குட் நைட் படத்தை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தால் லவ்வர் திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் அமைந்திருந்தால் லவ்வர் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வருவதும் இல்லாமல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் லவ்வர் திரைப்படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “லவ்வர் திரைப்படத்தை பார்த்தேன். இன்றைய தலைமுறையினர்களின் காதல் அருமையாக காட்டப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்குப் பிறகு நான் ஒரு படம்தான் பார்க்கிறேன் என்பதையே மறந்து விட்டேன். அவ்வளவு எதார்த்தமாக இருந்தது. மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்டோர் அருமையாக பணியாற்றியுள்ளனர். பிரபு ராம் வியாஸ் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருக்கிறார். ஷான் ரோல்டனின் இசை அற்புதமாக இருந்தது” என்று பட குழுவினரை பாராட்டியுள்ளார்.

MUST READ