கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியோரின் நடிப்பில் லப்பர் பந்து திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடிகை சுவாசிகா நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதாவது இளம் வயதில் யாரும் ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்த சுவாசிகாவை இன்றுவரையிலும் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து சுவாசிகா, சமீபத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் சூர்யா 45 படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர சூரியின் மாமன் திரைப்படத்தில் சூரிக்கு அக்காவாக நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்துவரும் சுவாசிகாவிற்கு, லப்பர் பந்து படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹீரோயினாக நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்ததாம்.
ஆனால் சுவாசிகா, ஹீரோயின் ரோலில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஏனென்றால் சுவாசிகாவிற்கு அக்கா, அண்ணி, சித்தி போன்ற ரோல்களில் நடிக்க விருப்பம் இருப்பதால், தொடர்ந்து இது போன்ற குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள், இன்றுள்ள காலத்தில் ஹீரோயின் வாய்ப்புக்காக பலரும் வரிசை கட்டி நிற்கும் நிலையில் சுவாசிகா, ஹீரோயினாக நடிக்காமல் குணச்சித்திர வேடத்தில் நடிக்க முன் வருவது மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டி வருகின்றனர்.
- Advertisement -