Homeசெய்திகள்சினிமாலைகா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'லூசிபர் 2'!

லைகா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘லூசிபர் 2’!

-

கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் லூசிபர். இந்த படத்தை மலையாள திரை உலகில் ஸ்டார் நடிகர் ஒருவரான பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியிருந்தார். பிரித்திவிராஜ் இயக்கிய முதல் திரைப்படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அரசியல் திரில்லர் கதைக்களத்தில் உருவான லூசிபர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து லூசிபர் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக பிரித்விராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பிறகு லூசிபர் 2 குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது எம்புரான் என்ற தலைப்பிடப்பட்டுள்ள லூசிபர் 2 படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ