spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலைக்கா நிறுவனத்தின் அடுத்த படம்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லைக்கா நிறுவனத்தின் அடுத்த படம்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

லைக்கா நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

லைக்கா நிறுவனம் தமிழ் படங்கள் பலவற்றை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் ஆவார்.

we-r-hiring

லைக்கா நிறுவனமானது பல பெரிய பட்ஜெட் படங்களையும் பல பெரிய ஹீரோக்களின் படங்களையும் தயாரித்து வருகிறது. அதன்படி கமல்ஹாசனின் இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் வேட்டையன் கொஞ்சம் பல படங்களை தயாரித்து வருகிறது. இதற்கிடையில் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள புதிய படத்தையும் தயாரிக்க லைக்கா நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகின்ற மே 6ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் அடுத்த படம்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அந்த போஸ்டரில் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஏ ஆர் ஜீவா எனும் அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் போன்றவர்களின் அப்டேட் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

MUST READ