Homeசெய்திகள்சினிமாபுயல் வேகத்தில் 100 கோடியை நெருங்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன்!

புயல் வேகத்தில் 100 கோடியை நெருங்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன்!

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் 10 நாட்களில் அதிக வசூலை குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் கூட்டணியில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் மிஸ்கின், யோகி பாபு, சரிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ள நிலையில் பரத் சங்கர் இசையமைத்துள்ளார். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கோழையாக இருக்கும் ஒருவன் மக்கள் பிரச்சினைக்காக எப்படி மாவீரனாக மாறுகிறான் என்பதை இந்த படத்தின் முழு நீள கதையாகும். இந்த படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் படத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

இவ்வாறாக இப்படம் இயக்குனர் சங்கர் நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் படம் ஹிட் ஆகியுள்ளது. அந்த வகையில் வெளியான 4 நாட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த திரைப்படம் தற்போது பத்து நாட்களில் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்ழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் 100 கோடியை நெருங்கிவிடும் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

MUST READ