தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படமானது சிவகார்த்திகேயனின் 23 வது படமாகும். இந்த படத்திற்கு மதராஸி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், பிஜு மேனன், வித்யூத் ஜம்வால் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படமானது ஏ.ஆர். முருகதாஸின் மற்ற படங்களை போல் ஆக்சன் கலந்த கமர்சியல் படமாக உருவாகி வருகிறது. அதன்படி தூத்துக்குடி, சென்னை ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் இலங்கையில் இறுதி கட்ட படப்பிடிப்பும் தொடங்கியது. அந்தப் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து படமானது வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.
e அதாவது இலங்கையில் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 15 நாட்கள் நடந்ததாக சொல்லப்படுகிறது. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், அதற்கு முன்பாக படமாக்கிய காட்சிகளுக்கு பின் தயாரிப்பு பணிகளை விறுவிறுப்பாக முடித்து விட்டாராம். தற்போது மீதம் அந்த 15 நாட்களுக்கு மட்டும் பின் தயாரிப்பு பணிகள் கவனிக்க வேண்டியது இருக்கிறதாம். எனவே இதன் மூலம் இப்படம் திட்டமிட்டபடி அறிவித்த தேதியில் ரிலீஸ் ஆகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -