Homeசெய்திகள்சினிமாமாதவன், நயன்தாரா, சித்தார்த் கூட்டணியின் 'டெஸ்ட்'.... விரைவில் ஓடிடியில் வெளியீடு!

மாதவன், நயன்தாரா, சித்தார்த் கூட்டணியின் ‘டெஸ்ட்’…. விரைவில் ஓடிடியில் வெளியீடு!

-

மாதவன், நயன்தாரா, சித்தார்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் டெஸ்ட் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.மாதவன், நயன்தாரா, சித்தார்த் கூட்டணியின் 'டெஸ்ட்'.... விரைவில் ஓடிடியில் வெளியீடு!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த். இவர்கள் மூவரும் இணைந்து டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன் இணைந்து மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மண்டேலா படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்த் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார். பான் இந்திய அளவில் இந்த படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தது இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.மாதவன், நயன்தாரா, சித்தார்த் கூட்டணியின் 'டெஸ்ட்'.... விரைவில் ஓடிடியில் வெளியீடு! இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவத் தொடங்கியது. அதன்படி இந்த படம் விரைவில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ