மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் மாதவன் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிடம் களமிறங்கி கலக்கி வருகிறார். அந்த வகையில் மாதவன் கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. அதே சமயம் இவர் தமிழில் ஏற்கனவே டெஸ்ட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் தற்போது அதிர்ஷ்டசாலி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் மாதவன். இந்த படத்தை தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்கிய மித்ரன் ஆர் ஜவகர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாதவனுடன் இணைந்து ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (நவம்பர் 3) காலை 9 மணி அளவில் வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டசாலி திரைப்படத்தினை AA மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.