பத்து தல படத்திலிருந்து புதிய அறிவிப்பு
சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் புதிய அப்டேட் வரும் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சில்லுனு ஒரு காதல் இயக்குநரின் அடுத்த படைப்பு
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணாவின் புதிய படம் பத்து தல. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிம்பு நாயகனாகவும், கௌதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
கன்னட படத்தின் ரீமேக்
கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியான முஃப்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில், கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வரும் மார்ச் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது இரண்டாவது பாடலுக்கான அறிவிப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பத்து தல திரைப்படம் மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.