- Advertisement -
சின்னத்திரை நடிகரான கவின், லிப்ட் படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு முடிந்தும் பெரும் சிக்கல்களை தாண்டி வெளியான டாடா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள திரைப்படம் ஸ்டார். இதில், கவினுடன் லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராாஜா இசை அமைத்துள்ளார். படம் வரும் மே மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் கவினுடன் இணைந்து, ஆதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Making of #MELODY find out how @Kavin_m_0431 transformed himself into the new 'azhagi' in town https://t.co/FKz43uhfZw#STAR ⭐ #STARFromMay10 @elann_t @thisisysr @aaditiofficial @PreityMukundan @LalDirector pic.twitter.com/mkYSS3jXff
— Kollywood Times (@kollywoodtimes) April 23, 2024