spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமக்கள் செல்வன் விஜய் சேதுபதி.....பர்த்டே ஸ்பெஷல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி…..பர்த்டே ஸ்பெஷல்!

-

- Advertisement -

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.....பர்த்டே ஸ்பெஷல்!தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகராக உயர்ந்து நிற்கிறார் விஜய் சேதுபதி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட விஜய் சேதுபதி தொடக்க காலத்தில் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான் என்பது போல அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார். குறிப்பாக சூது கவ்வும் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. ரஜினி, சத்யராஜ், சரத்குமார் போன்ற உச்ச நட்சத்திரங்கள் ஆரம்பத்தில் வில்லன்களாக நடித்து பின்னர் ஹீரோவாக தங்களை மெருகேற்றிக் கொண்டனர். ஆனால் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகம் ஆகி தற்போது பிரபல ஹீரோக்களுக்கு வில்லன்களாகவும் கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், ரஜினி, கமல் ஆகியோருக்கு வில்லன்களாக நடித்தது மட்டும் இல்லாமல் பாலிவுட்டுக்கும் சென்று ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.....பர்த்டே ஸ்பெஷல்!சினிமாவில் தனக்குத் தெரிந்த நண்பர்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே பல படங்களில் கேமியா ரோலில் நடித்து கை கொடுத்தார். விஜய் சேதுபதியை, ரசிகனை ரசிக்கும் தலைவன் என மக்கள் ஏற்றுக் கொண்டதால் மக்கள் செல்வன் என்னும் பெயரையும் சூட்டி விட்டனர். விஜய் சேதுபதி ஜீரோ நிலையிலிருந்து தற்போது இந்திய அளவில் மோஸ்ட் வாண்டட் நடிகராக மாறியிருக்கிறார். தன் திறமையின் உச்சமாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார். அத்தகைய மகா கலைஞன் இன்று தன்னுடைய 46 வது பிறந்த ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் அன்பையும் பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ