- Advertisement -
மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் மலைக்கோட்டை வாலிபடன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டாராகவும், லாலேட்டனாகவும் கொண்டாடப்படுபவர் மோகன்லால். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். இதையடுத்து, ஜெயிலர் திரைப்படம் மலையாளத்தில் பெரிதளவில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, லூசிபர் 2 எம்புரான் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். பிருத்விராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாய், லண்டன், கேரளா என அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
