- Advertisement -
தளபதி 68 படத்தில் சுந்தர் சி பட நடிகை மாளவிகா சர்மா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லியோ. தமிழ்நாடு மட்டுமன்றி மொத்த இந்தியாவும் இத்திரைப்படத்திற்காக காத்திருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் லியோ படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று முடிந்தது. அண்மையில் படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி, அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கி இருக்கின்றனர்.
Very Happy to be associated with the most expected project… #Thalapathy68 … Thank you so much dear @vp_offl Sir for this opportunity!! And sharing screen space with our one and only Thalapathy @actorvijay Sir will always be very very special to me ❤❤❤ pic.twitter.com/SxSYgJvA4h
— MalvikaSharma (@IaMalvikaSharma) December 13, 2023