spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் படத்தில் இணையும் மலையாள பிரபலம்

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் மலையாள பிரபலம்

-

- Advertisement -
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் மலையாள பிரபலம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் மாவீரன் மற்றும் அயலான். இதில், மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியானது. ரவிக்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார்.

we-r-hiring

 

அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 21-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டு அண்மையில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இப்படத்தை கமல்ஹாசன் இயக்குகிறார்.

இதைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி இருந்தார். இது சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படமாக உருவாகிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. பெரியரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் மலையாள பிரபலம் பிஜூ மேனன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார்

MUST READ