spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலிஸ்ட் பெருசாயிட்டே போகுதே... 'லியோ' படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகை!

லிஸ்ட் பெருசாயிட்டே போகுதே… ‘லியோ’ படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகை!

-

- Advertisement -

லியோ படத்தில் மற்றுமொரு மலையாள நடிகர் இணைந்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.

we-r-hiring

த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் மற்றும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பை பார்த்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் மலையாள நடிகை சாந்தி மாயாதேவி இந்தப் படத்தில் இணைந்துள்ளார். த்ரிஷ்யம் 2 படத்தில் வழக்கறிஞராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்  சாந்தி மாயாதேவி. தற்போது அவர் லியோ படத்தில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். தற்போது மற்றுமொரு மலையாள நடிகையும் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சாந்தி மாயாதேவி, லோகேஷ் கனகராஜ் உடன் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வருகிறது.

MUST READ