பட்டையை கிளப்பிய மோலிவுட் ஸ்பெஷல் பிரேமலு… ஓடிடி ரிலீஸ் அப்டேட்…
- Advertisement -
மலையாளத்தில் வெளியாகி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு பெரும் ஹிட் அடித்த பிரேமலு திரைப்படம் ஓடிடி தளத்திற்கு வருகிறது.

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிரேமலு. கிறிஸ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜூ, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதை, ஃபஹத், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் தயாரித்து உள்ளனர். விஷ்ணு இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படம் மலையாளத்தில் மாபெரும் ஹிட் அடித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில், ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் படத்தை கொண்டாடித் தீர்த்தது.


மலையாளத்தில் இத்திரைப்படம் பெரும் வெற்ற பெற்றதன் காரணாக தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு, கடந்த மார்ச 8-ம் தேதி வெளியானது. தெலுங்கு மொழியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமன்றி திரை நட்சத்திரங்களும், படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோர் இத்திரைப்படத்தை வெகுவாக பாராட்டினர். மலையாளம் மற்றும் தெலுங்கில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிரேமலு படத்தை தமிழிலும் படக்குழு களம் இறங்கியது. பிரேமலு படம் தமிழிலும் டப் செய்யப்பட்ட கடந்த மாதம் வெளியானது.

தமிழ் மொழியிலும் படம் ஹிட் கொடுத்தது. வசூலை வாரிக் குவித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரேமலு திரைப்படம் வரும் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.