மம்மூட்டி – மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.மலையாள சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவான்களாக வலம் வருபவர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரும் தனித்தனியே தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி மலையாள சினிமாவில் கோலாட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 7 படங்களில் நடித்திருக்கும் நிலையில் இந்த படம் இவர்களின் 8வது படமாகும். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை டேக் ஆப், மாலிக் ஆகிய படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து நயன்தாரா, பஹத் பாசில், குஞ்சாகோ போபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக இலங்கை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்திற்கு பேட்ரியாட் – Patriot என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை (அக்டோபர் 2) 12 மணியளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இந்த டீசரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -