spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது.... மம்மூட்டி வாழ்த்து!

மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது…. மம்மூட்டி வாழ்த்து!

-

- Advertisement -

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது.... மம்மூட்டி வாழ்த்து!

மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகரான மோகன்லால் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ‘ஹிருதயபூர்வம்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது ‘வ்ருஷபா’, ‘த்ரஷ்யம் 3’ போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு மோகன்லால் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. எனவே பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் மோகன்லாலுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மம்மூட்டியும் தனது வாழ்த்தினை தெரிவித்து இருக்கிறார்.மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது.... மம்மூட்டி வாழ்த்து! அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு சக பணியாளராக மட்டுமல்ல, ஒரு சகோதரராகவும், பல தசாப்தங்களாக இந்த அற்புதமான திரைப்பட பயணத்தில் ஈடுபட்டுள்ள கலைஞராகவும் நீங்கள் இருக்கின்றீர்கள். தாதாசாகேப் பால்கே விருது என்பது ஒரு நடிகருக்கானது மட்டும் இல்லை. சினிமாவை வாழ்ந்து சுவாசித்த உண்மையான கலைஞருக்கான மரியாதை. உங்களால் நான் பெருமைப்படுகிறேன். லால், நீங்கள் உண்மையிலேயே இதற்கு தகுதியானவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ