- Advertisement -
மம்மூட்டி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற காதல் தி கோர் மற்றும் கண்ணூர் ஸ்குவாட் படங்களின் வெற்றிக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

கோலிவுட்டின் நாயகி ஜோதிகா மற்றும் மோலிவுட்டின் மம்மூக்காவாக கொண்டாடப்படும் மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்திருந்த திரைப்படம் தான் காதல் தி கோர். மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் கிட்சன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ஜியோ பேபி இந்த படத்தை இயக்கினார். கடந்த நவம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது., படத்தில் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது போன்ற காட்சிகள் இருந்ததாக சர்ச்சை கிளம்பியது. இருப்பினும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும், படத்தில் மம்மூட்டியின் நடிப்பும் பாராட்டப்பட்டது.




இந்நிலையில், மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வௌியான இரண்டு திரைப்படங்களுமே வெற்றி பெற்றதால், படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் மம்மூட்டி, ஜோதிகா உள்பட நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.