கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கடைசியாக இவரது இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் இவர் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் இதுவரை ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கௌதம் வாசுதேவ் மேனன், மலையாளம் மற்றும் தமிழ் மொழியை முன்னணியாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தினை நடிகர் மம்மூட்டி தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். மேலும் லீனா, சித்திக், விஜய் பாபு, விஜி வெங்கடேஷ் ஆகியோர் மம்மூட்டியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
#DominicandTheLadiesPurse Official Teaser Releasing Tomorrow at 7 PM IST@MKampanyOffl @DQsWayfarerFilm @Truthglobalofcl pic.twitter.com/4LssGwBHDg
— Mammootty (@mammukka) December 3, 2024

அதேசமயம் இந்த படத்தில் நடிகை சமந்தா நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று (டிசம்பர் 4) மாலை 7 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.