spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் மணிகண்டன்.... இயக்குனர் யார்?

பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் மணிகண்டன்…. இயக்குனர் யார்?

-

- Advertisement -

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் மணிகண்டன்.... இயக்குனர் யார்?அடுத்ததாக இவர் அட்டகத்தி தினேஷ், ஆர்யா, அசோக் செல்வன் ஆகியோரின் கூட்டணியில் வேட்டுவம் திரைப்படத்தை இயக்க இருப்பதாக சமீப காலமாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு பிசியான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித், தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ், நீலம் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் பல படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக பா. ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஜெய்பீம் மணிகண்டன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக நடிகர் மணிகண்டன் நடித்திருந்தார் என்பது ரஜினிக்கு மகனாக நடிகர் மணிகண்டன் நடித்திருந்தார். இந்நிலையில் இரண்டாவது முறையாக பா. ரஞ்சித் மணிகண்டன் கூட்டணி இணைய உள்ளது. இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் மணிகண்டன்.... இயக்குனர் யார்?அதன்படி இந்த புதிய படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன. அந்த அறிமுக இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனராக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

ஜெய் பீம் படத்திற்கு பிறகு மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ