Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போனது லவ்வர் திரைப்பட ஓடிடி ரிலீஸ்

தள்ளிப்போனது லவ்வர் திரைப்பட ஓடிடி ரிலீஸ்

-

மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான், மணிகண்டனின் திரைவாழ்வு ஏறுமுகமாக அமைந்தது. அவரது முகமும் பிரபலம் அடையத் தொடங்கியது. ராஜாகண்ணுவாக அவர் நடித்த ஜெய் பீம் திரைப்படம் மணிகண்டனை கோலிவுட்டின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றியது. இப்படத்தைத் தொடர்ந்து அவர் குட் நைட் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் திரைப்படத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். இதில் ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடித்துள்ளார். கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்திற்கு இசை அமைத்துள்ளார். திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் கடந்த மாதம் 9-ம் தேதி லவ்வர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

 

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் கடந்த மார்ச் 8-ம் தேதியே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில், லவ்வர் திரைப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ