spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமணிகண்டனின் லவ்வர் திரைப்படம்... 18 கெட்ட வார்த்தைகள் நீக்கம்...

மணிகண்டனின் லவ்வர் திரைப்படம்… 18 கெட்ட வார்த்தைகள் நீக்கம்…

-

- Advertisement -
மணிகண்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் லவ்வர் திரைப்படத்திலிருந்து 18 கெட்ட வார்த்தைகளை சென்சார் போர்டு நீக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜெய் பீம் திரைப்படத்தில் ராஜாகண்ணு கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் மணிகண்டன். இப்படத்தைத் தொடர்ந்து அவர் குட் நைட் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் மணிகண்டன் ஏற்று நடித்த மோகன் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு லவ்வர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring
இதில் ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடித்துள்ளார். கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்திற்கு இசை அமைத்துள்ளார். திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். லவ்வர் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வௌியாகி வரவேற்பை பெற்றது. வரும் மார்ச் 9-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், லவ்வர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 18 கெட்ட வார்த்தைகள், படத்தின் தணிக்கையின் போது நீக்கப்பட்டுள்ளது. மேலும், படத்திற்கு தற்போது யு ஏ சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கி இருக்கிறது.

MUST READ