Homeசெய்திகள்சினிமாஜெய்பீம் மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்'.... டீசர் வெளியீடு!

ஜெய்பீம் மணிகண்டன் நடிக்கும் ‘லவ்வர்’…. டீசர் வெளியீடு!

-

- Advertisement -

ஜெய்பீம் மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்'.... டீசர் வெளியீடு!காதலும் கடந்து போகும், ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மணிகண்டன். குறிப்பாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான
ஜெய் பீம் படத்தில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து குட் நைட் என்னும் ஃபீல் குட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்து 2023 ஆம் ஆண்டின் சிறந்த படங்களின் வரிசையில் இடம் பிடித்தது.
எனவே அடுத்ததாக மணிகண்டன் நடிக்கும் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்து வந்த நிலையில் அடுத்ததாக, மணிகண்டன் “லவ்வர்” எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக கௌரி பிரியா நடித்துள்ளார். மேலும் கண்ணன் ரவி, ஹரிஷ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபு ராம் வியாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.2024 காதலர் தினத்தன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இரு காதலர்களின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை பின்னணியாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

லவ் டுடே, ஜோ உள்ளிட்ட படங்களை போன்று இப்படமும் இன்றைய காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த டீசர் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ