நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதே சமயம் இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ராணுவத்தின் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், முகுந்த் வரதராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 18) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் மணிரத்னம், நடிகை சாய் பல்லவியிடம், “நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். விரைவில் இருவரும் இணைந்து படம் பண்ண விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் மணிரத்னம் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.