இயக்குனர் மாரி செல்வராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
அதைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கள் இடம் பிடித்துள்ளார் மாரி செல்வராஜ். அடுத்ததாக இவருடைய இயக்கத்தில் வாழை எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. எதார்த்தமான கிராமத்து கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படமானது மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் படத்தில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
PaRanjith: A director has watched #Vaazhai, but that Dir said that ‘he won’t say that he has watched the movie’. But MariSelvaraj has finally got video from that Dir, about the movie😀
Meanwhile Dir #ManiRatnam sends his appreciation video for Vaazhai🤝 pic.twitter.com/jsB6zLs3sX
— AmuthaBharathi (@CinemaWithAB) August 20, 2024
அதே சமயம் சமீபத்தில் இதன் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம், மாரி செல்வராஜின் வாழை படம் பார்த்து பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “மாரி செல்வராஜின் மற்றைய படத்தில் இருக்கும் தனித்துவங்கள் வாழை திரைப்படத்திலும் இருக்கிறது. அத்தனை பேரையும் எப்படி இவ்வளவு அழகாக நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை. பொறாமையாக இருக்கிறது. படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.