Homeசெய்திகள்சினிமாரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியர்.... 'வேட்டையன்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியர்…. ‘வேட்டையன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

-

நடிகர் ரஜினி கடந்தாண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியர்.... 'வேட்டையன்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! இந்தப் படத்தை ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். மேலும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர் பல உள்ளிட்ட பிரபலங்கள் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத் மும்பை போன்ற பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியர்.... 'வேட்டையன்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!இதற்கிடையில் இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் நடந்த பேட்டியில் வேட்டையன் திரைப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “ரஜினி சாருடன் நடிப்பது இதுவே முதல்முறை. டி ஜே ஞானவேல் சாரி இயக்கத்தில் நடிப்பதும் முதல் முறை. இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருக்கிறேன். ரிலீஸ் குறித்து சரியான தகவல் எனக்கு தெரியவில்லை.

ஆனால் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் என்னுடைய டப்பிங் பணிகள் தொடங்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை அபிராமி, ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் இதன் மூலம் தற்போது வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் தான் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

MUST READ