Homeசெய்திகள்சினிமா'எம்புரான்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய மஞ்சு வாரியர்!

‘எம்புரான்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய மஞ்சு வாரியர்!

-

- Advertisement -

நடிகை மஞ்சு வாரியர் எம்புரான் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.'எம்புரான்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய மஞ்சு வாரியர்!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் துணிவு, வேட்டையன், விடுதலை 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது ரிலீஸுக்கு தயாராகி வரும் ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மஞ்சு வாரியர். இதற்கிடையில் இவர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லூசிபர் 2- எம்புரான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் பிரியதர்ஷினி ராமதாஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லூசிபர் முதல் பாகத்தை போல் லூசிபர் 2 – எம்புரான் திரைப்படத்திலும் மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் வலுவானதாக அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. 'எம்புரான்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய மஞ்சு வாரியர்!இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மேலும் சமீபத்தில் டீசரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர், எம்புரான் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

MUST READ