சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இப்படம் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்து வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களை திறந்தாலே குணா பட “கண்மணி அன்போடு காதலன்” பாடல் வரிகள் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. காரணம் குணா குகை. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து மிகவும் எமோஷனலாக இப்படம் கேரளாவை தாண்டி மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்திருப்பது தான் படத்தின் வெற்றிக்கான மிகப் பெரிய காரணம். இப்படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே 100 கோடியை கடந்த தற்போது 150 கோடி வசூலை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 200 கோடியை இந்த படம் வசூலித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள சினிமாவிலேயே அதிக வசூலை வாரிக் குவித்த படங்களான புலி முருகன், லூசிபர், 2018 போன்ற படங்களின் பட்டியலில் மஞ்சும்மெல் பாய்ஸ் படமும் இடம் பிடித்துள்ளது.
பரவா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். சைஜு ஹாலித் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, லால் ஜூனியர், பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.