Homeசெய்திகள்சினிமா200 கோடி கிளப்பில் இணைந்த மஞ்சும்மெல் பாய்ஸ்!

200 கோடி கிளப்பில் இணைந்த மஞ்சும்மெல் பாய்ஸ்!

-

சமீப காலமாக வெளியாகும் மலையாள திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் கேரளா மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் அதிக வசூலை வாரி குவித்தது. 200 கோடி கிளப்பில் இணைந்த மஞ்சும்மெல் பாய்ஸ்!இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் மிகக்குறைந்த நாட்களில் அதிவேகமாக 200 கோடியை வாரிக் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்த படம் தமிழகத்தில் மட்டுமே 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் கண்மணி அன்போடு காதலன் பாடலும், மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் பேச்சும் தான். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எமோஷனல் கலந்த கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படம் தற்போது வரையிலும் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே 150 கோடி வசூலை கடந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 200 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.200 கோடி கிளப்பில் இணைந்த மஞ்சும்மெல் பாய்ஸ்!

இந்தப் படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்க பரவா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சுசின் ஷியாம் இசையமைக்க சைஜூ ஹாலித் ஒளிப்பதிவு செய்து இருந்தார். படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், லால் ஜூனியர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ