Homeசெய்திகள்சினிமாஅத்தனை கனவுகளும் கனவாய் போனது.... சிம்புவிடம் கதை சொன்ன மனோஜ்!

அத்தனை கனவுகளும் கனவாய் போனது…. சிம்புவிடம் கதை சொன்ன மனோஜ்!

-

- Advertisement -

இயக்குனர் இமயம் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவருடைய மகன் மனோஜ் நேற்று (மார்ச் 25) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாராலும் ஈடு செய்ய முடியாத இந்த துக்கத்தை தாங்க முடியாமல் திரைப் பிரபலங்கள் பலரும் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அத்தனை கனவுகளும் கனவாய் போனது.... சிம்புவிடம் கதை சொன்ன மனோஜ்!

மனோஜ் பாரதிராஜா தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம் வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இவரது நடிப்பில் வெளியான மற்ற சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருப்பினும் ஈஸ்வரன், மாநாடு, விருமன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார் மனோஜ். இதற்கிடையில் இவர் மணிரத்னம், சங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். நடிப்புதான் தனக்கு கை கொடுக்கவில்லை. தந்தையைப் போல் ஒரு பெரிய இயக்குனராகி விடலாம் என்ற கனவுடன் சிகப்பு ரோஜாக்கள் 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டார் மனோஜ். இது தொடர்பாக நடிகர் சிம்புவிடம் கதை சொல்லியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது நடக்காமல் போன நிலையில், கடந்த 2023 இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். அத்தனை கனவுகளும் கனவாய் போனது.... சிம்புவிடம் கதை சொன்ன மனோஜ்!இதன் பின்னர் மனோஜ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி தன்னுடைய அப்பா பாரதிராஜாவை போல் மிகப்பெரிய இயக்குனராக மாறி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இவர் உயிரிழந்தது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோஜ் மீது உயிரை வைத்திருந்த பாரதிராஜாவின் கனவு தன் மகன் எப்படியாவது பெரிய நடிகராகி விட வேண்டும் பெரிய இயக்குனராகி விட வேண்டும் என்பதுதான். அதேபோல் தான் மனோஜும் தன் திறமையை எப்படியாவது வெளிக்கொண்டு வரவேண்டும் என்று பல முயற்சிகளை செய்தார். ஆனால் அத்தனை கனவுகளும் வெறும் கனவாய் மட்டுமே போனது.

MUST READ