மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ‘மார்கழி திங்கள்’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது!
‘மார்கழி திங்கள்‘ படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் தனுஷ் வெளியிட்டார்!
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநராக அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குகிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் தோற்றம் தற்போது வெளியாகி உள்ளது. ‘மார்கழி திங்கள்’ படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.