இயக்குனர் மாரி செல்வராஜ் பைசன் படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவருடைய இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கியிருந்த பைசன் – காளமாடன் திரைப்படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் ஆகியோரும் நடித்திருந்தனர். பா. ரஞ்சித் இந்த படத்தை தயாரிக்க நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைத்துள்ளார்.
கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த படத்திற்காக கடினமாக உழைத்த துருவ் விக்ரமையும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது பேசிய மாரி செல்வராஜ், “நான் ஒரு படம் ஆரம்பிக்கிறேன் என்றால் நான் யாரையாவது உறுதியாக நம்புவேன். அவர் நமக்கு சப்போர்ட் பண்ணுவார் என்று நம்புவேன். அப்படி நான் ரொம்ப ஆணித்தனமாக நம்புன ஒரு ஆள் துருவ். அவருடைய சப்போர்ட் இல்லை என்றால் இந்த படத்தை பண்ணியிருக்கவே முடியாது.
#Mariselvaraj about #Dhruv :
“I trusted Dhruv with all my heart.. Without his support, i wouldn’t have done this film.. this film is his victory as a Hero..”❣️pic.twitter.com/mogSnTjjT2
— Laxmi Kanth (@iammoviebuff007) October 24, 2025

அவரிடம் நான் ஒன்னே ஒன்னு தான் சொன்னேன். இந்த படத்தை இரண்டு பேரும் சேர்ந்து தான் பண்ணப் போறோம். நம்ம ரெண்டு பேர்ல உனக்கும் எதுவும் ஆகலாம். எனக்கும் எதுவும் ஆகலாம். படம் முடியும்போது நம்ம ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகலாம். ஆனாலும் படத்தை துணிந்து பண்ணுவோம் என்று பண்ணோம். இதில் மிகப்பெரிய வெற்றியாக நான் பார்ப்பது துருவுக்கு கிடைத்த வெற்றி தான். அந்த அளவிற்கு அவர் உழைத்திருக்கிறார். ஹீரோவாக ஆசைப்படும் ஒருவர் இந்த அளவிற்கு உழைப்பாரான்னு ஆச்சரியமாக இருந்தது. அவருடைய உழைப்பிற்கு வெற்றி கிடைத்தது சந்தோஷம்” என்று தெரிவித்துள்ளார்.


