Homeசெய்திகள்சினிமாபட்டைய கிளப்பும் 'மார்க் ஆண்டனி'.... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பட்டைய கிளப்பும் ‘மார்க் ஆண்டனி’…. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

விஷால், எஸ் ஜே சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையிலும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது. விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து செல்வராகவன், ரித்து வர்மா, அபிநயா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சயின்ஸ் பிக்சன், டைம் டிராவல், ஆக்சன் திரில்லர் என பல இடங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் எஸ் ஜே சூர்யா வின் காமெடி படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. மேலும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் முதல் நாளில் 9 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ