விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்து தற்போது 7வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருக்கின்றனர். சண்டை, வாக்குவாதம், களேபரம் என இருக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ என்பதால் சீரியல்களை விட இந்நிகழ்ச்சிக்கு தான் டிஆர்பி எகிறுகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் நாளில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 57 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த வார எலிமினேஷன் பட்டியலில் விசித்ரா, கூல் சுரேஷ், தினேஷ், பூர்ணிமா, அனன்யா, ஜோவிகா சரவணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் தற்போது இருவரும் கைகளை கட்டிக் கொள்ளும் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த டாஸ்க் -ல் மாயாவிற்கும் தினேஷுக்கும் இடையில் கடும் மோதல் நடப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. இருவரும் மாறி மாறி நீதான் நான்சென்ஸ் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தினேஷுக்கு மாயா ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி பெண்களின் விஷயத்தில் மோசமானவன் என அவருக்கு ரெட் கார்டு கொடுத்து மாயாவும் பூர்ணிமாவும் வெளியேற்றினார்கள். தற்போது தினேஷையும் வெளியேற்ற மாயா ப்ளான் போட்டு இவ்வாறெல்லாம் செய்கிறார் என்பது போல் இந்த புரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.