- Advertisement -
மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டி தெரிவித்தார்.
மறைந்த மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், மயில்சாமி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் மட்டுமல்லாமல் சிவன் பக்தராகவும் வாழ்ந்தவர்.


எப்பொழுதும் எம்ஜிஆர் பற்றி பேசுவார் அல்லது சிவனைப் பற்றி பேசுவார்.
விவேக், மயில்சாமி ஆகியோரது இழப்பு, திரை துறைக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் பேரிழப்பாகும் என்றார்.
மயில்சாமி இறப்பு தற்செயல் கிடையாது. எல்லாம் சிவனின் கணக்கு அவரது பக்தனை சிவராத்திரி அன்று அழைத்துக் கொண்டார்.

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்றார் ரஜினி. வண்டலூர் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு ரஜினி கையால் பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்று மயில்சாமி டிரம்ஸ் சிவமணியிடம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


