- Advertisement -
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கில், விழா ஏற்பாட்டாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். படங்கள் மட்டுமன்றி அவ்வப்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பின் கீழ் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். அளவுக்கு அதிகமாக டிக்கெட்கள் விற்கப்பட்டதால் நிற்கக்கூட இடமில்லாமல் ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பலரால் பங்கேற்கமுடியாமல் போனது.
