தளபதி 68 படத்தில் நடிகர் மைக் மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்க உள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாக இருக்கிறது. இதுகுறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் நாளை படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த படத்தில் சினேகா, பிரியங்கா மோகன், ஜெய், அபர்ணாதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் 90 காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் கொலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மீனாட்சி சௌத்ரியும் இணையாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மோகன் ஹரா எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது .


