மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம்… பிரம்மாண்டமாக உருவாகி வரும் பயோபிக்…
- Advertisement -

நடனம் எனும் ஆயுதத்தால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப்போட்டவர் மைக்கேல் ஜாக்சன். அவரது நடனத்திற்கும், பாடல்களுக்கும் இந்த உலகம் அடிமையாகக் கிடந்தது. அவர் ஆங்கில பாடகர் என்றாலும், இந்தியாவில் தமிழ்நாட்டில் கடைக்கோடியில் உள்ள கிாரமத்தில் கூட அவருக்கு ரசிகர் இருப்பது தான் அவரது திறமை. எழுச்சிப் பாடல்கள் மற்றும் அசரடிக்கும் நடன அசைவுகளுக்கு அவரே தனித்துவம் வாய்ந்தவர். அவரது நடனம் மீது இந்த தலைமுறையினருக்கும் தீராக்காதல் உள்ளது.

அமெரிக்காவில் 1985-ம் ஆண்டு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயது முதலே தந்தையோடு சேர்ந்து பாடி, தனது திறமையை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவர் சந்தித்த அவமானங்களும், அசிங்கங்களும் ஏராளம். அவரது நிறத்திற்காகவும், உருவத்திற்காகவும் ஏராளமானோர் அவரை விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஆனால், இந்த அனைத்து விமர்சனங்களுக்கும், அவமானங்களுக்கும் தனது பாடல்கள் மூலமும், நடனம் மூலமும் பதிலடி கொடுத்தார் மைக்கேல் ஜாக்சன். லண்டன் நகரில் நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தபோது, 2009-ம் ஆண்டு அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், மைக்கேல் ஜாக்சனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குகின்றனர். ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடிக்க உள்ளனர். மேலும், மைக்கேலின் உறவினர் ஜாபர் ஜாக்சன் என்பவர் தான் மைக்கேல் ஜாக்சனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பார்சிலோனாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை கண்டிராத மைக்கேலின் பல வீடியோக்களும் இந்த திரைப்படத்தில் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.