மிர்ச்சி சிவா நடித்துள்ள பறந்து போ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிர்ச்சி சிவா, சென்னை 600028, சரோஜா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவரது நடிப்பில் வெளியான தமிழ் படம், வணக்கம் சென்னை ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவரது நடிப்பில் சுமோ திரைப்படம் வெளியானது. பல வருடங்களுக்கு பின்னர் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையில் சிவா, கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் பறந்து போ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சிவா உடன் இணைந்து அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஹில்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். ஏகாம்பரம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

இந்த படமானது அப்பா – மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற ஜூலை 4 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.