Homeசெய்திகள்சினிமாஓடிடியில் வெளியானது மிஷன் சாப்டர் 1!

ஓடிடியில் வெளியானது மிஷன் சாப்டர் 1!

-

மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே படம் ஓடிடி ரிலீஸ் ஆகியுள்ளது.

அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கியிருந்த திரைப்படம் மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே. இந்த படத்தில் அருண் விஜயுடன் இணைந்து நிமிஷா சஜயன், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை சுபாஸ்கரன் தயாரித்து இருந்தார். ஓடிடியில் வெளியானது மிஷன் சாப்டர் 1!ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.ஓடிடியில் வெளியானது மிஷன் சாப்டர் 1!

இதற்கிடையில் அருண் விஜய், பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மான் கராத்தே பட இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் அருண் விஜய்.

MUST READ