மோகன்லால் நடிக்கும் வ்ருஷபா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் மோகன்லால் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக ‘ஹிருதயப்பூர்வம்’ திரைப்படம் வெளியானது. நல்ல ஒரு பீல் குட் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இது தவிர மோகன்லால் தமிழில் ‘ஜெயிலர் 2’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அஜித்தின் ஏகே 64 படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் இவர், வ்ருஷபா எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதனை நந்தா கிஷோர் எழுதி, இயக்க ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, நேகா சக்சேனா, ராகினி திவேதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கனெக்ட் மீடியா, ஏ.வி.எஸ் ஸ்டுடியோ, பாலாஜி டெலிபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. மது பிரசாந்த் பிள்ளை இதற்கு இசையமைத்துள்ளார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஆக்சன் கலந்த கதைக்களத்தில் அப்பா- மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


