Homeசெய்திகள்சினிமாமொட்டை தல காத்தவராயன்..... தனுஷின் 'D50' பட அப்டேட்!

மொட்டை தல காத்தவராயன்….. தனுஷின் ‘D50’ பட அப்டேட்!

-

- Advertisement -

தனுஷின் ‘D50’ படம் சம்பந்தமான புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
மொட்டை தல காத்தவராயன்..... தனுஷின் 'D50' பட அப்டேட்!தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். தற்காலிகமாக D50 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், அனிகா சுரேந்திரன், அபர்ணா பால முரளி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மொட்டை தல காத்தவராயன்..... தனுஷின் 'D50' பட அப்டேட்!இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. மேலும் இப்படம் வட சென்னையில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து மாஸான கேங்ஸ்டர் படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் தனுஷ் மொட்டை தலை கெட்டப்பில் நடித்துள்ளார். இந்நிலையில் தனுஷ், D50 படத்தில் காத்தவராயன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.மொட்டை தல காத்தவராயன்..... தனுஷின் 'D50' பட அப்டேட்! அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே வெளியான தகவலின் படி இப்படத்திற்கு காத்தவராயன் என்பதை சுருக்கி ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே படம் சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51 வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ