பெற்றோரால் வாய்ப்புகளை இழந்தேன்… நடிகை மிருணாள் தாகூர் வருத்தம்…
- Advertisement -
பெற்றோரால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக நடிகை மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழியில் மெகா தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தவர் மிருணாள் தாகூர். தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோதே, அவருக்கு பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடித்தார். இந்தியில் பல படங்களில் நடித்த அவர், சீதாராமம் படம் மூலம் தென்னிந்திய திரையுலகிலும் பிரபலம் அடைந்தார். அவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த தி பேமிலி ஸ்டார் படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் தனது பெற்றோர்களால் சில பட வாய்ப்புகளை இழந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும்போது, முத்தக்காட்சி உட்பட நெருக்கமான காட்சிகளில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. என் பெற்றோர்களும் அதை விரும்ப மாட்டார்கள். அப்படி காட்சிகள் இருந்ததால் சில பட வாய்ப்புகளை மறுத்தேன். பிறகு எவ்வளவு காலம் தான் தவிர்த்துக் கொண்டே இருக்க முடியும் என இது குறித்து என் பெற்றோரிடம் பேசினேன் என்று கூறினார்.

மேலும், நெருக்கமான காட்சிகளில் நடிப்பது என் விருப்பம் இல்லை, என என் தொழில் எனவும், நடிப்பு எனவும் புரியவைத்தேன். அதன்பிறகு தான் எனக்குச் சரியான கதாபாத்திரத்தையும், படத்தையும் தேர்வு செய்யத் தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.