Homeசெய்திகள்சினிமாஅம்பானி குடும்ப திருமண க்ரூஸ் கொண்டாட்டம்... ஹாலிவுட் பாடகி ஒப்பந்தம்...

அம்பானி குடும்ப திருமண க்ரூஸ் கொண்டாட்டம்… ஹாலிவுட் பாடகி ஒப்பந்தம்…

-

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் எப்படி எங்கு நடக்கப்போகிறது என்பது தான் ஒட்டுமொத்தமாக நாட்டில் உள்ள அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். ஏனெனில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளே பலரையும் வியப்பை ஆழ்த்தியது. அதனால், திருமணத்தில் எதுபோன்ற விசேஷங்கள், எங்கு நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜாம் நகரிில் மூன்று நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை கண்டு நாடே வியந்து போனது.

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த நிகழ்ச்சிகளை அம்பானி ஏற்பாடு செய்திருந்தார்.இதில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ஆலியா பட், ரஜினிகாந்த், தோனி, அட்லீ உள்பட பாலிவுட்டில் தொடங்கி கோலிவுட் வரை அனைத்து தரப்பு டாப் நட்சத்திரங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தற்போது பிரான்ஸ் கடற்கரையோர சொகுசு கப்பலில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமண கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

இந்த திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்க அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் முன்னணி நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நிகழ்ச்சியில் பாட பிரபல பாப் நட்சத்திரம் ஷகிராவுக்கு சுமார் 15 கோடி ரூபாய் கொடுத்து, அம்பானி குடும்பத்தினர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். மேலும், கேட்டி பெர்ரி உள்பட பல பாடகிகளும் திருமண கொண்டாட்டத்தில் பாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ