நடிகர் முனீஸ்காந்த், மிடில் கிளாஸ் பட வெற்றியை ஆட்டம் போட்டுக் கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடத்தில் நடித்து பெயர் பெற்றவர் முனீஸ்காந்த். இவர் விஜய் சேதுபதி, விஷால், விஷ்ணு விஷால், ரவி மோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் தற்போது மிடில் கிளாஸ் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் விஜயலட்சுமி, முனீஸ்காந்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் நிலையில் காளி வெங்கட், குரேஷி, ராதா ரவி, கோடாங்கி வடிவேலு, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிஷோர் முத்துராமலிங்கம் இந்த படத்தை இயக்கியுள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பிரணவ் முனிராஜ் இதன் இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கின்றனர்.
சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் கஷ்டப்படும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படம் சில ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தற்போது வரை ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் எதார்த்தமான திரைக்கதையில் வெளியான இந்த படத்தில் முனீஸ்காந்த் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார்.
#Munishkanth is celebrating his success of #MiddleClass film, with a vibe dance🕺💥 pic.twitter.com/cRiNbAaZEv
— AmuthaBharathi (@CinemaWithAB) November 25, 2025

இந்நிலையில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை மேளதாளத்துடன் ஆட்டம் போட்டு கொண்டாடியுள்ளார் முனீஸ்காந்த். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூலும் படத்திற்கு கிடைக்கும் ஆதரவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


